Wednesday, November 17, 2010

மறுபடியும் நீ வருவாய் என...



தருணங்கள் என்னை சூழ
மேகங்கள் என்னை சூட-வந்த
வெண்ணிலவை போலும்
குளிர்ச்சி தந்தாயடி நீ எனக்கு...

என் பொன்மேனியை
ஏந்திச் செல்வாயா என நீ கேட்க
என் மேனியையே நனைத்தேனடி உனக்காக...

அரிச்சந்திரனாய் வாழ எனக்கும் விருப்பம் தான்-ஆனால்
உன்னை கண்டவுடன் மனம் மெய்யை மறைக்கிறதடி
பூக்களைச் சூட ஆசைதான் உன்னை காணும் வரை
ரோஜாவில் தோன்றும் முட்களை நான் வெறுத்ததில்லை
நீ பனித்துளியாய் அதை செதுக்கியதில்  இருந்து...

உன்னை கண்டவுடன் வானத்துக்கும்
உன்னை மகிழ வைக்க ஆசை வருகிறதடி,
கோள்களின் அணிவகுப்பாய் வானவில்லை ஏந்தி நிற்கிறது உனக்காக...

நீ மறைந்ததும் மழலைகளோடு விளையாட மனம் மறுக்கையில்
உன்னை நினைத்தபடி உன் இருக்கையை காண்கிறேன்
மறுபடியும் நீ வருவாய் என...
                                                  -க.ஜெயப்ரியா.

1 comment:

Bewitch the Skint

When you bestow food for the hungry you make a lasting difference in their lives. The smugness that you get can never be expressed in wor...