Saturday, February 2, 2013

PROMISE!

She died!

No one will ever know the seriousness of this issue by next year this date.True we need to show how we feel towards this issue.It's our matter of concern we are heading towards a void place that will remain void until steps are taken.I don't realize why government has no immediate steps for this issue!.True we have more cases to be worried in tamilnadu besides delhi issue but you know what this was the issue that rouse you to feel ashamed about our state!.Just speaking out of crowd and fighting for justice won't rest the soul in peace.If you really feel sorry never show your concern only for a day.The solution towards the nation's problem would be holding a position among public that'll make you take your own decisions,a decision you feel that's right a decision that will make a revolution.Try reaching a height no one could ever expect.We have our soul power to support an issue then and we can promise a better nation without crimes!

சொல்லப்பட !

இவ்வுலகம் செல்லும் விசையில்
நான் என்னை துலைத்து
உன் சுவாசத்தை ஏந்தி
என் மேனி சிலிர்க்க
உன் உணர்வுகளோடு குடித்தனம் செய்யும் கள்வனாய்
உணர்சிகளோடு பயணம் செய்யும் -என்
மனம் பிம்பத்தில் பிரதிபலிக்கிறது உன் முன்னே -என்
உணர்வுகளை உன் உணர்சிகளாக்க....
உறவுகளை தொலைத்த என் உணர்வுகள் -இன்று
என்னிடம் உன் மானத்தை தொலைத்து உன் மனதை
ருக்கு பகிர்கிறாய் என ஏளனமாய் கேட்டது -நான்
என் மானத்தை துறந்தபோது கண்ணீர் சிந்தவில்லை
சிந்தி இருந்தால் அவள் எந்தி இருப்பாளா எனத் தெரியவில்லை ...
உணர்வுகளை பகிரும் எனக்கு அவள் உணர்சிகள் புரிவதில்லை ...
வேண்டிக்கொள்கிறேன் -உன்
உணர்வுகளை புரிந்து
உன்னால் அந்த மூன்று எழுத்து -என்
செவியில் சொல்லப்பட...!

கற்க வுதவிய தோழமை!

வாழ்க்கையில் மீன்கள் விண்மீன்கள் ஆகலாம் - ஆனால்

அதனை சாத்தியமாக்குவது நம்மை போன்ற படைப்புகள்!

படைப்புகள் சிலவாகும் அதனை எதிர்ப்பவர்கள் பலவாகும்

படைத்தால் தான் வாழ்க்கை,வாழ்ந்தால் தான் உலகம்

வீழ்ந்தால் தான் எவர்க்கோ வெற்றி

எவனோ யாசிக்கலாம் -ஆனால்

மனம் சென்ற போக்கிலே நாம் செல்வதாகாது

வாழுகின்ற வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு பாடம்

என் வாழ்க்கையை எண்ணி உன் சரித்திரம் எழுதப்படட்டும்

பிறப்புக்கும் இறப்புக்கும் வித்தியாசம் ஒன்றுதான்-அழிவு

காண்பதற்கும் கேட்பதற்கும் வித்தியாசம் ஒன்றுதான்-பயணம்

விதி விட்டுச் சென்றதை மனம் மறத்தல் கூடாது

மறந்ததை வாழ நினைப்பது மூடத்தனம்

வாழ்ந்து பாருங்கள் விண்மீனில் வானவில்லாய் மாறுங்கள் என்பது மூலதனம்!
நீச்சல் அடிக்க தெரிந்தவனுக்கு, குளம்
எவ்வளவு ஆழம் என்பதை பற்றி
அறிய தேவையில்லை , வாழ்க்கை
ரசிப்பவனுக்கு, பிரச்சனை ஒன்றும்
பெரிதில்லை !!
உயிரில்லாத கற்கள் கூட
கடவுளாக கோவில்களில் வீற்று இருக்க,
உயிர்கள் இப்படி வேதனை படுவது
ஏனோ ?!

மனம்!

தனக்கு கிடைக்காதது
யாருக்கும் கிடைக்கக்கூடாது

என்று சிந்திக்கிறவன் சமூக விரோதியாகிறான்.
தனக்கு கிடைக்காதது
மற்றவர்களுக்காவது கிடைக்கட்டும்
என்று கருதுபவன் சமூக சீர்திருத்தவாதியாகிறான் !!
பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிறந்தரமான சரணாலயம் இருப்பதில்லை. நானும் ஒரு பறவைதான்... நிறந்தரம் எனும் நிலையையே அசௌகரியமாக கருதும் பறவை..
அடுத்த வினாடி ஒலித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏறாலம்.. ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தில் நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்..நானும் ஒரு பயணாளியாக!

ஏழை சொல்லும் வாசகம் !

வசதி இருந்தும் உண்ணா விரத போராட்டம்
குப்பைத்தொட்டில் எச்சில் இலைக்கூட கிடைக்காதென்று என் வயிறோ உணவிற்கு திண்டாட்டம்
எழுதபடிக்க தெரியாது ஆனால் தினம் தினம் எழுதி வைத்திருக்கிறேன் ஒரு வேலை உணவு இன்று கிடைக்குமோ நாளை கிடைக்குமோ என்று!
ஆறுதல் சொன்ன யவரும் இல்லை எனக்குள் நானே! ஆறுதல் சொல்கிறேன் கண்ணீர் சிந்தயபடி என் வறுமையை எண்ணி எண்ணி !!


Friday, February 1, 2013

வலிகள்!



நேசித்தால் தான் வலி 
வாழ்ந்தால் தான் வாழ்க்கை 
வகுத்தபின் உணர்வதையும் 
வலித்தபின் அழுவதையும் விட்டுவிடு 
மரணம் என்பது சரித்ரத்தின் முடிவு 
விதியின் வலிகள் வலிமைகளுக்கு போதும் 
என் இதயம் நிற்பதற்கு!
விண்ணை கண்டு விடியும் என்று நம்பும் நீ 
உன்னை கண்டு முடியும் என்று நம்பு ...:) 
உனக்கு கிடைக்கும் வெற்றியில் பலரின் தோல்வி இருக்கும் 
உனக்கு கிடைக்கும் தோல்வியில் யாரோ ஒருவற்கு வெற்றி இருக்கும்.
so don't feel for ANYTHING~!!!

வாய்மை!

வாய்மை என்று எதுவுமில்லை -மாய்ந்த
நம் மூதாதையரை நிலவில் காணும்வரை !

வலிகளை அறிவோம்!

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.
பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு… உறவுகள் இதுதானென்று!  

Bewitch the Skint

When you bestow food for the hungry you make a lasting difference in their lives. The smugness that you get can never be expressed in wor...