Sunday, July 10, 2011

சிநேகத்தோடு சில வார்த்தைகள் ...!

விழிகளில் வழியும் நீருக்கு தெரியாது
என் சிரிப்பினை சிதறடித்தது என்று...

விடியலை நோக்கி நகரும் காலத்திற்கு தெரியாது 
காலத்தை நோக்கி மனிதன் ஓடுகிறான் என்று...
ஓடுகிறவனுக்கு உழைப்பு இல்லை-ஆனால்
மளைப்பு இருக்கிறது ...
இவனுக்கு இதுவென்று எழுதிய கணக்கு 
மணக்கணக்காய் செல்வது ஏனோ ?!

எட்டிய தூரத்தில் வானம் இல்லை என்றதால் என்னவோ 
சிகரங்கள் நமக்கு ஆறுதல் அளிக்கின்றன..
சிகரங்களை நோக்கி வருகிறேன் என்ற மூடனாய் அல்ல 
அதனை அடைந்து கொண்டிருக்கும் கள்வனாய் வாழ்கிறேன்...

என் பிறப்பினை அறியாத இவ்வுலகம்-என் 
இறப்பினை அறியும்-வானம் 
தன் வருத்தத்தை அழுகையாய் பொழியும் மின்னலுடன்..!

கேட்பதற்கு நான் இல்லை-உணர்வதற்கு 
நீ இல்லை என்றால்-என் 
வாழ்வியல் சரித்திரத்தின் நுணுக்கம்-அதனை 
உணர்ந்த உனக்கோ-என் 
வாழ்வியல் புனித நூலாகும் ...!

உணர்வுகளை தூண்டிய உணர்ச்சிகளுக்கு வேண்டுகோள்-மறுபடியும் 
நீ என்னை அடைவீரானால்-என் 
அனுமதியை கேட்டு வாருங்கள்,
கற்களை எரிந்தப்பின் அழுவது ஏனோ ?!

பொய்மயமான வாழ்வினை மெய்பிக்க விரும்புகிறேன் 
நானும் ஓர் பயணாளியாக-சிறிய கர்வத்துடன் 
உங்களை விட பலவற்றை அறிந்தவனாய்...!

அறிய வைத்த வலிகளுக்கு நன்றி-வாழுகின்ற 
வாழ்க்கையை வலிமையோடு விட்டுச் சென்றதற்கு ...!

என் சரித்திரம் புரிந்த உனக்கு-என் 
சாதனை தெரியும்-ஆனால் 
என் வலிமைகளை அறிந்த உனக்கு-என் 
வேதனைகள் புரியும்..!

கற்க வுதவிய தோழமையுடன் எழுதுகிறேன் 
சிறந்தோங்கி வாழ்க பல்லாண்டு என ...!!

                                               -JEYAPRIYA

Bewitch the Skint

When you bestow food for the hungry you make a lasting difference in their lives. The smugness that you get can never be expressed in wor...