
மண்ணில் அவதரித்தபோது பல உயிர்கள் என்னை தாங்கின,
காலையில் உதியும் சூரியனாய்,
இரவில் தோன்றும் சந்திரனாய்,
ரோஜாவாய் இருந்த என் அம்மா,
கையில் முள் என்னை தாக்கியதை அறிந்து-கண்ணீர்
வடித்தாள் பனித்துளியாய்.
விண்ணில் பறந்த போது கிரகங்கள் என்னை தாங்கின,
திரும்பி மண்ணுலகத்திற்கு சென்றேன்,
சூரியன் சந்திரன் பாதுகாப்பில்,
என்னையும் பலர் நேசிக்கிறார்கள் என்பதனை அறிந்தேன்,
மண்ணுலகதிற்கு திரும்பிய பின் உணர்ந்தேன்,
அம்மா என்று அழைக்க உயிர் இல்லை என்று,
விண்ணுலகத்திற்கு அனுப்பி வைத்த என் அம்மா,
என்னைக் காண விண்ணுலகத்திற்கே வந்துவிட்டாலே,
உணர்ந்தேன் என் உயிர் நீதானே என்றழைத்த அம்மாவிடம்,
உன் உயிர் நான்தானே என்பதரிய உயிரில்லையென்று.
உணர்ந்தேன் என் அம்மாவின் இறப்புக்கு,
மேகத்துக்கும் கவலையென்று.
அழுகையை மழைத்துளியாய் பொழிந்தது மின்னலுடன்.
-க.ஜெயப்ரியா.