Wednesday, December 1, 2010

AIDS AWARENESS !!!

ஏழையின் அழுகைச் சத்தம் நம் நெஞ்சங்களை 
வருடுவதில்லை அதனை அனுபவிக்கும் வரை !

நாம் மண்ணில் அவதரித்தபோது நல்லவர்கள்,
வாழ்க்கையை கையில் ஏந்தி நடத்தும் போது வல்லவர்கள்,
வல்லவர்களாய் மாயும் போது நம் வாழ்வியல் சரித்திரமாகும் !

வாழுகின்ற வாழ்க்கை சரித்திரமாகட்டும் 
இருவர் மட்டும் கொள்கையே மனிதனின் 
உள்ளங்களை வருடிச் செல்லட்டும் !

காலம் பொன் போன்றது கூற்று மாறட்டும் 
நாம் பொன் போன்றவர்கள் என்ற நிலை மலரட்டும் !

இனிய வாழ்வு நடத்த 
அரிச்சந்திரனாய் வாழ ஆசைப்படுங்கள் 
ரோஜாவில் தோன்றும் முட்களாய் இராமல் 
அதனைச் செதுக்கிய பனித்துளியாய் வாழ்ந்து காட்டுங்கள் !

வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமாகட்டும் !

தவறுகள் பல 
மன்னிப்புகள் சில 
கவலையின்றி மகிழ 
காலத்தோடு ஒட்டி வாழ
கைகொடுப்போம் ஆதரவற்றவர்களுக்கு !

No comments:

Post a Comment

Bewitch the Skint

When you bestow food for the hungry you make a lasting difference in their lives. The smugness that you get can never be expressed in wor...